திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் மறைவு - திரைத்துறையினர் அஞ்சலி!
Aug 22, 2026, 09:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் மறைவு – திரைத்துறையினர் அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன், சிறிது காலமாக வயது மூப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்னைக்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலை 5.30 மணியளவில் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்.

அவரது உடல் ஏவிஎம் ஸ்டியோவில் உள்ள 3வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏவிஎம் சரவணனின் உடலுக்குத் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதை ஏவிஎம் சரவணன் பெற்றுள்ளார். ஏவி மெய்யப்ப செட்டியாருக்குப் பின்னர், அவரது மகனான ஏவிஎம் சரவணன் அந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.

நானும் ஒரு பெண், சம்சாரம் அது மின்சாரம், சிவாஜி, வேட்டைக்காரன், மின்சார கனவு, அயன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை ஏவிஎம் சரவணன் தயாரித்துள்ளார். ஏ.வி.எம். சரவணனின் உயிரிழப்பு திரைப்படத் துறையினரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த படங்கள் ஏவிஎம் தயாரிப்பில் தான் வந்துள்ளதென மறைந்த ஏவிஎம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் நடிகர் சிவகுமார் புகழாரம் சூட்டினார். தனது வாழ்க்கையை மாற்றியமைத்தவர் ஏவிஎம் சரவணன் எனக் கூறிய அவர், 73 வருடங்களில் 175 படங்களை ஏவிஎம் நிறுவனம் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

மிகச் சிறந்த பண்பாளர் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் ஏவிஎம் சரவணன் என இயக்குனர் வசந்த் தெரிவித்தார். ஏவிஎம் சரவணன் தயாரிப்பில் படம் இயக்கியது இல்லை எனக் கூறிய அவர், தேசிய விருது வாங்கும் போதெல்லாம் தன்னை தொடர்புகொண்டு பாராட்டுவார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

ஏவிஎம் சரவணன் மிக அற்புதமான மனிதர் என இயக்குனர் வாசு தெரிவித்தார். அவரது மரணம் குறித்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை என கூறிய இயக்குனர் வாசு, சரவணனின் குடும்பத்திற்கு தனது ஆறுதல் தெரிவித்தார்.

இயக்குநர்கள் பலருக்கு ஏவிஎம் ஸ்டுடியோ வாழ்க்கை கொடுத்ததாக நடிகர் விஷால் தெரிவித்தார். பல முக்கிய நடிகர்களை ஏவிஎம் ஸ்டுடியோ அறிமுகப்படுத்தியதாகக் கூறிய அவர், தயாரிப்புப் பணிகளை ஏவிஎம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தமிழ் திரையுலகம் தற்போது வரை இருப்பதற்கு ஏவிஎம் தான் காரணம் என நடிகர் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார். ஏவிஎம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் குடும்பத்தில் ஒருவரை போல ஏவிஎம் சரவணன் பழகியதாகக் கூறினார். சரவணன் அவர்களுக்குப் பல கனவுகள் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

Tags: அஞ்சலிதிரைத்துறைFilm producer A.V.M. Saravanan passes away - Film industry pays tributeஏ.வி.எம்.சரவணன் மறைவு
Share
Tweet
SendShare
Previous Post

ஹாங்காங்கின் மிகப்பெரிய லாண்டா தீவை 21 மணி நேரத்தில் நீந்தி இருவர் சாதனை!

Next Post

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு : மலைமீது ஏறிச் சாமி தரிசனம் செய்யப் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு!

Related News

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி – தமிழக அரசு சார்பில் மரியாதை!

கூலிப்படை தலைவர்களாக மாறி வரும் தவெக நிர்வாகிகள் – நயினார் நாகேந்திரன்!

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு – முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

இன்றைய தங்கம் விலை!

தனியாருக்கு நிகராக கொள்முதல் விலை – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அகில பாரதிய ஒருங்கிணைப்பு கூட்டம் நிறைவு!

வளர்ச்சிக்கான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் – தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies