சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கிக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் உயரதிகாரிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்குள் முடிக்கச் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்குக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உயர்நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், ஆதாரங்களை சேகரிக்க உள்ளதால் கால அவகாசம் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு மனுதாக்கல் செய்தது.
இதனை பரிசீலித்த உயர்நீதிமன்றம், விசாரணையை முடிக்கச் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.
















