15 வயதிலேயே குவாண்டம் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று ஒட்டு மொத்த அறிவியல் உலகத்தையும் பெல்ஜியத்தை சேர்ந்த சிறுவன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
தற்போதைய காலக்கட்டத்தில் இளம் தலைமுறையினர் சோசியல் மீடியாக்கள், வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் பெல்ஜியத்தை சேர்ந்த 15 வயதான லாரண்ட் சைமன்ஸ் குவாண்டம் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
2009-ல் பெல்ஜியத்தில் பிறந்த லாரண்ட் சைமன்ஸ், 8 வயதிலேயே உயர்நிலை பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். 3 ஆண்டுகளில் நிறைவடையும் இளங்கலை பட்டத்தை வெறும் 18 மாதங்களில் சிறப்பு தகுதிகளுடன் தனது 11 வயதில் சைமன்ஸ் நிறைவு செய்துள்ளார்.
மேலும் 12வது வயதிலேயே குவாண்டம் இயற்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்று அசத்தியுள்ளார்.
இந்நிலையில் 2025ம் ஆண்டு 15வது வயதில் லாரண்ட் சைமன்ஸ், ஆண்டர்வெர்ப் பல்கலைக்கழகத்தில் குவாண்டம் இயற்பியலில் தனது ஆய்வுக் கட்டுரையை வெற்றிகரமாகச் சமர்பித்து அதிகாரப்பூர்வமாக முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் வழங்கினாலும் அதை ஏற்க மறுத்து, சூப்பர்-மனிதர்களை உருவாக்குவது மற்றும் ஆயுட்காலத்தை அதிகரிப்பது ஆகியவை லட்சிய இலக்காக வைத்து லாரண்ட் சைமன்ஸ் செயல்பட்டு வருகிறார்.
















