தென்காசி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 14 பேருக்குத் தனி தனி இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காசிநாதபுரத்தில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி கோயில் திருவிழாவிற்கு வரி வசூல் செய்வது தொடர்பாக ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மணிவேல் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
இதுதொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட 14 பேருக்குத் தலா 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், 41 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
















