பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தான் இந்தியாவுடனான போருக்குக் காரணம் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலிமா கான் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் பரவின.
இதனையடுத்து இம்ரான்கானை அவரது சகோதரி உஸ்மா கான் சந்தித்தார். இந்நிலையில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ள மற்றொரு சகோதரி அலிமா கான், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கைக்குப் பின் நடந்த சண்டைக்கு இஸ்லாமிய பழமைவாதியான அசிம் முனீரே காரணம் எனக் கூறினார்.
















