திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதையைக் காவல்துறையினர் அடைத்துள்ளதால் பணிக்குச் செல்ல முடியவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து முன்னணியினர் மற்றும் காவல்துறையினர் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாகத் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள பழனியாண்டவர் தெருவைக் காவல்துறையினர் தடுப்பு வேலிகள் வைத்து அடைத்துள்ளதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லமுடியவில்லை என்றும், யாரும் பணிக்குச் செல்லமுடியவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வாகனங்களை வெளியே எடுத்துச் செல்லக் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை எனவும் கூறியுள்ளனர். மேலும், பழனியாண்டவர் தெருவைக் காவல்துறையினர் முழுமையாக அடைத்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
















