எத்தனையோ தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தது இருந்துகிட்டும் இருக்கு. ஆனா அன்னைக்கும் இன்னைக்கும் என்றைக்கும் மறக்க முடியாத தயாரிப்பு நிறுவனம்ன்னா அது ஏவிஎம்.
1935ல அல்லி அர்ஜூனான்ற படம் தயாரிச்சாலும் 1945ல ஏவிஎம் நிறுவனத்த தொடங்கி அது மூலமா பல்வேறு படங்கள தயாரிச்சாரு ஏவிஎம் மெய்யப்பன். அப்பாவுடைய பெயரையும் புகழையும் கட்டி காக்குறது மிகப்பெரிய விஷயம் ஆனா இங்க தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்ன்ற அடைமொழிக்கு இவர்தான் உதாரணம். எல்லா நடிகர்களுக்கும் ஒரு god father என்று கூட இவரை சொல்லலாம் அவர்தான் ஏவிஎம் மெய்யப்பன் உடைய மகன் ஏவியம் சரவணன்.
1959ல மாமியார் மெச்சின மருமகள் படம் மூலமா மெய்யப்பன் மகன் சரவணனன் பல்வேறு படங்கள தயாரிக்க ஆரம்பிச்சாரு. தமிழ் தெலுங்கு ஹிந்தின்னு அப்பவே பான் இந்தியா படங்கள்ள தயாரிச்சாருன்னு சொல்லலாம். 70,80 களுல ரஜினி படங்கள், கமல் படங்கள வித்தியாசமான பானியில தயாரிச்சு ரசிகர்களுக்கு விருந்தளிச்சாரு.
இன்னும் சொல்லனுன்னா படத்துக்காக வெளிநாடுகளுலருந்து தொழில்நுட்பங்களையும், வாகனங்கள்ன்னு பல்வேறு சினிமா சார்ந்த விஷயங்கள நம்ம ஊருக்கும் கொண்டு வந்திருக்காரு. நல்ல கதையா இருந்தா அது பிரமாண்டமா இருந்தாலும் சரி சிறிய பட்ஜெட் பண்ணுங்க இருந்தாலும் சரி இல்லன்னா புதிய நடிகர்களுடைய படமா இருந்தாலும் சரி முகச்சுழி இல்லாம உடனே ஓகே சொல்றவரு சரவணன்.
அந்தக் காலத்துல வெளியூர்ல போயி ஷூட்டிங் எடுக்கிறது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம் அப்படி இருந்தா கூடத் தன்னுடைய ஏவிஎம் ஸ்டுடியோவையே ஊட்டி, கொடைக்கானல் குலுமனாலி இப்படி பல ஊர்களுடைய செட்டப் எல்லாம் இந்தச் சென்னை கோடம்பாக்கத்தில் போடவச்சு அசத்தியவரு. கதையே கேட்காம கூட ஒரு சில நடிகர்கள் ஏவிஎம் சரவணன் உடைய அழைப்பு வந்தா படத்தில் நடிக்க ஒத்துக்குவாங்களாம்.
இது மட்டும் இல்ல முரட்டுக்காளை படத்துல ஜெய்சங்கர் கூட இவர் சொல்லி தான் வில்லனாக நடிச்சாரம். இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் (FPAI), அகில உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவராகவும் (FIAAP) பதவி வகித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, ராஜா சாண்டோ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். ’முயற்சி திருவினையாக்கும்’, ‘மனதில் நிற்கும் மனிதர்கள்’ (4 பாகங்கள்), ‘ஏவிஎம் 60 சினிமா’ ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறாரு. எஸ்பி முத்துராமன் ஒவ்வொரு முறையும் என்னுடைய கூடப் பிறவா சகோதரன் ஏவிஎம் சரவணன் சொல்றது உண்டு.
இது மட்டும் இல்ல எஸ் பி முத்துராமன் அப்படினாலே இன்னவரைக்கும் தன்னுடைய குருவை விட்டுக் கொடுக்காதவர் தான் ரஜினிகாந்த் அதேமாறி ஏவிஎம் சரவணன்னையும் எங்கேயும் விட்டுக் கொடுக்கமாட்டார். ஒவ்வொரு முறையும் தன்னோட சம்பளத்தை உயர்தணும்ன ரஜினிகாந்த் சரவணனன் கிட்ட தான் கேப்பாறாம் அன்பே வா, சகல கலா வல்லவன், சம்சாரம் அது மின்சாரம், அயன், சிவாஜி, வேட்டைகாரனுக்குன்னு 175 படங்கள் தயாரிச்சிருக்காரு.
2014க்கு பின்ன எந்த படங்களு தயாரிக்கலன்னாலும் ஏவிஎம் ஸ்டுடியோ மூலம்மா என்னென்ன படங்கள் தயாரிச்சாங்களோ அதுல பயன்படுத்துன்ன பொருட்கள வடபழனியில இருக்குற ஏவிஎம் ஸ்டுடியோவில்ல பொதுமக்கள் பார்வைக்காகக் கண்காட்சியா வைக்கப்பட்டு இருக்கு யாரு கிட்ட பேசினாலும் கை கட்டி தான் அடகத்தோட பேசுற சரவணன்னான் எப்போவும் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை தான் போடுவாராம் யாரது வெள்ளை வேஷ்டி சட்டை கட்டிட்டு வந்தா நீ என்ன avm சரவணனா என்று பேசுகிறது வழக்கம். தமிழ் திரை உலகமே திரண்டு வந்து அவருடைய மறைவுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருக்கு.
















