ஒரே நாளில் 550 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்திடம் விமான போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம் கேட்டுள்ளது.
விமானிகளுக்கு என பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட விதிமுறைகள் காரணமாக விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கடந்த 3 நாட்களாக 65 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளை அழைத்து விமான போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம் கேட்டது. இது குறித்த அறிக்கை விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கப்படும் என்றும், இண்டிகோ நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது எனவும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே விமான நிறுவனங்களுக்கான புதிய விதிகளை DGCA வாபஸ் பெற்றுள்ளது.
















