அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினை கெளரவிக்கும் விதமாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.
ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தந்த புதினை, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரவேற்றார். நாட்டின் பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
மாறாக காங்கிரஸ் எம்பி சசிதரூருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், விருந்திற்கான அழைப்பை ஏற்ற சசிதரூர், புதினுக்கான விருந்தில் பங்கேற்றார்.
இதனிடையே தனது 2 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரஷ்யா புறப்பட்டு சென்றார்.
















