மழைநீரில் தத்தளிக்கவிட்டதோடு மக்களைத் தாகத்தில் தவிக்கவிடத் திமுக அரசு திட்டமிடுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களைத் தாகத்தில் தவிக்கவிடும் விதமாக, லாரிகள் மூலம் வழங்கும் குடிநீருக்கான கட்டணத்தைத் திமுக அரசு உயர்த்தியுள்ளதற்கு கண்டனம தெரிவித்துள்ளார். .
முறையான குடிநீர் இணைப்புகளை வழங்க இயலாத திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் லாரிகள் மூலம் வழங்கும் குடிநீரை நம்பியே தலைநகர் முழுவதும் வீடுகளும் அடுக்கு மாடி குடியிருப்புகளும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
, எந்தவொரு காரணமுமின்றி 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிக்கு ரூ.75-ம், 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிக்கு ரூ.125-ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, உடனடியாக விலை உயர்வை அறிவாலயஅரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், அவர் கூறியுள்ளார்.
குடிநீர், பால், சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டும் விலையேற்ற மாடலை மக்களே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரைவில் வீசியெறிவர் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
















