45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகள் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தானாகவே லோயர் பெர்த் இருக்கை கிடைக்க ரயில்வே துறை வழிவகை செய்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை அளித்தார்.
அதில் மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தானாகவே லோயர் பெர்த் இருக்கை ஒதுக்கப்படும் எனவும், முன்பதிவின் போது, தங்கள் விருப்பமாக எதையும் தேர்வு செய்யாவிட்டாலும், முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு கீழ்படுக்கை வசதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
அவர் அளித்திருந்த பதில் அறிக்கையில், ஸ்லீப்பர், 3ம் வகுப்பு, 2ம் வகுப்பு பெட்டிகளில் தலா 4 பெர்த் இருக்கைகள் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், வேறு பெர்த்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணியினர் உள்ளிட்டோருக்கு கீழ் படுக்கை காலியாக இருந்தால் அவர்களுக்கு அதனை ஒதுக்கி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















