ரயில்களில், ‘எலக்ட்ரிக் கெட்டில்’ எனப்படும், தண்ணீர் கொதிக்க வைக்க பயன்படுத்தும் பாத்திரத்தை பயன்படுத்தினால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்களில் சிலர் ,’கெட்டில்’ எனும் மின்சாரத்தில் செயல்படும் பாத்திரத்தை பயன்படுத்தி, தேநீர் உள்ளிட்டவை போடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
சமீபத்தில், மஹராஷ்டிராவில் பெண் ஒருவர் ஓடும் ரயிலில், ‘கெட்டில்’ பயன்படுத்தி, நுாடூல்ஸ் செய்து சாப்பிடும் வீடியோவை, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இந்தநிலையில் ரயில்களில் உள்ள சார்ஜிங் பாயின்ட்’களில், ‘கெட்டில்’ போன்ற மின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்படி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
















