விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் துணை முதலமைச்சர் உதயநிதியின் வருகைக்காக அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
செஞ்சியில் திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இவரது வருகைக்காக அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் கார், பேருந்து, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டதால் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் அவசர தேவைகளுக்காகச் செல்வோர் மிகுந்த அவதி அடைந்தனர். மேலும் உதயநிதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக அண்டை கிராம மக்கள் லோடு வேனில் அழைத்து வரப்பட்டதால் திண்டிவனம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
















