கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் பாறை கற்கள் ஏற்றிச் சென்ற கனரக லாரியின் டயர் வெடித்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தேங்கய்பட்டணம் மீன்பிடி துறைமுக மறுசீரமைப்பு பணிக்காக நாள்தோறும் ஏராளமான கனரக லாரிகளில் பாறை கற்களை ஏற்றிச் சென்று கடலில் கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பாறை கற்கள் ஏற்றிச் சென்ற கனரக லாரியின் பின்பக்க டயர் வெடித்து பழுதாகி நின்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை லாரிக்குச் சொந்தமான நபர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
















