மயிலாடுதுறையில் உள்ள குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்குத் தருமபுரம் ஆதீனம் வாழ்த்து தெரிவித்தார்.
குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட, மாநில அளவிலான குத்துச்சண்டை, வாள்வீச்சு, சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் 38 பேர் தங்க பதக்கங்களும், 581 பேர் வெள்ளி பதக்கங்களையும், 59 பேர் வெண்கல பதக்கங்களையும் வென்றனர்.
பதக்கங்களை வென்று அசத்திய மாணவர்களை நேரில் சந்தித்த தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
















