ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் உடையணிந்து ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா பக்தி பாடலை பாடிய பங்கேற்பாளர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்வு எந்த நாட்டில் நடந்தது என்பது தெரியவில்லை, ஆனாலும் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
வெளிநாட்டில் உள்ள வணிக வளாகப் பகுதிகளில், கிருஷ்ணா பக்தர்கள் பாரம்பரிய பஜனை பாடிக்கொண்டிருந்தபோது, திடீரென ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் மற்றும் பேட்மேன் வேடத்தில் அணிந்த மூவரும் இந்தப் பஜனையில் கலந்து கொண்டனர்.
சூப்பர் ஹீரோக்கள் பக்தர்களுடன் சேர்ந்து ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா பக்தி பாடலை பாடியதை அங்கிருந்தவர்கள் கைதட்டியும், ஆரவாரம் செய்தும் உற்சாகப்படுத்தினர்.
மேலும், தங்களதுசெல்போன்களில் வீடியோவாக எடுத்துச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
















