சேலம் அஸ்தம்பட்டியில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே நோயாளிகள் இல்லாத நிலையில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்துக்கொண்டு இருந்தது.
தனியார் மருத்துவமனையின் இந்த ஆம்புலன்ஸ் அதிவேகமாக வந்ததாகக் கூறப்படும் நிலையில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது மோதியது.
இந்த விபத்தில் வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் அதன் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
பின்னர் பொதுமக்களின் உதவியோடு விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் மீட்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















