இந்தோனேசியாவில் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தின் அடியில் ஒருவாரமாகச் சிக்கித் தவித்த பூனை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
சென்யார் புயல் காரணமாகக் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என அடுத்தடுத்த பேரிடர்களால் உருக்குலைந்தது இந்தோனேசியா.
வெள்ளத்தில் சிக்கி 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 600-க்கும் மேற்பட்டோர் மாயமானதாகத் தெரிகிறது.
தொடர்ந்து அங்கு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு சுமத்ராவில் இடிந்து விழுந்த கட்டடத்திற்குள் ஒரு வாரமாகச் சிக்கித் தவித்த பூனையை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
அதன் உரிமையாளர், தான் 14 பூனை வளர்த்ததாகவும் எத்தனை உயிர்பிழைத்தன என்பது தெரியவில்லை எனவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
















