அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
பாபாசாஹெப் அம்பேத்கரின் நினைவு நாள், பிறப்பு இறப்பு எனும் கர்மத்தில் இருந்து விடுபடுவதைக் குறிக்கும் வகையில் மஹாபரிநிர்வான் தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, அவரது 70வது நினைவுதினமான இன்று நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
இதே போன்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
















