சீனாவில் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை போன்று நடனமாடும் பெண்ணின் வீடியோ வைரலாகியுள்ளது.
காவிரி ஆற்றின் களிமண்ணால் உருவாக்கப்படும் தஞ்சாவூர் பொம்மை உலகப் புகழ் பெற்றவை.
தொடக்கத்தில் காவிரி ஆற்றின் களிமண்ணால் செய்யப்பட்ட நிலையில், தற்போது நவீன பொம்மைகள் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ், காகிதக்கூழ், மரத்தூள் கொண்டும் உருவாக்கப்படுகின்றன.
இந்நிலையில் சீனாவின் ஷென்சென் பகுதியில் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை போன்று நடனமாடும் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
குறிப்பாக ஷென்சென் பகுதியில் உள்ள வணிக வளாகம், பாரம்பரிய திருவிழாக்களில் இந்த நடனம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
எது எப்படியோ தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை போன்ற நடனம் சீனாவிலும் கால்பதித்திருப்பது நமக்கெல்லாம் பெருமை தான்.
















