கோவை மாவட்டம் சிறுமுகை அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நபரை, ஒற்றை யானை ஆக்ரோஷமாகத் துரத்திய காட்சி வெளியாகி உள்ளது.
லிங்கபுரம் வனப்பகுதியை ஒட்டிக் கூலித் தொழிலாளி ஒருவர், ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பவானி ஆற்றில் தண்ணீர் குடித்து கொண்டிருந்த காட்டு யானை, திடீரென அவரை நோக்கி வேகமாக ஒடி வந்தது.
இதனைப் பார்த்த கூலித் தொழிலாளி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், கூச்சலிட்டு யானையை அங்கிருந்த விரட்டினர்.
















