அமெரிக்காவில் கடலோர காவல் படை நடத்திய போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு பசிபிக் கடற்பகுதி வழியாகச் சர்வதேச போதைப்பொருள் கும்பல், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் கடத்துவதாக அமெரிக்கா கடலோர காவல் படைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாகப் படகு ஒன்றில் போதைப்பொருள் கும்பல் ஒன்று வருவதை கண்ட, கடலோர காவல் படை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதையடுத்து, அந்தப் படகினை சுற்றிவளைத்து, அதிலிருந்த 9 ஆயிரம் கிலோ எடையுடைய மிகவும் ஆபத்தான கோக்கைன் போதைப்பொருளை கைப்பற்றிப் பறிமுதல் செய்தது. தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலையும் கைது செய்து அழைத்துச் சென்றது.
















