தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை கொடுத்ததாக கூறி அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பினர் டெல்லி காவல் நிலையத்தில் கிரிமினல் புகார் அளித்துள்ளனர்.
பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து அண்மையில் தேர்தல் ஆணையம் ராமதாஸ் தரப்புக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இதற்கு ராமதாஸ் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்த வகையில் அன்புமணிக்கு எதிராக டெல்லி காவல் நிலையத்தில் ராமதாஸ் தரப்பை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி புகார் மனு அளித்துள்ளார்.
அதில் தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை அன்புமணி கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
















