டெல்லி, மும்பையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
விமான சேவை வழங்கும் பணியாளர்களுக்கான புதிய விதிமுறைகளால் கடந்த 4 நாட்களாக நாடு முழுவதும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து டிஜிசிஏ தனது புதிய விதிமுறையை விலக்கிக் கொண்டது. இந்நிலையில் 5-வது நாளாகச் சனிக்கிழமையும் 200-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்தாகின. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.
















