இண்டிகோ விமான சேவை பாதிப்பு குறித்து தேவையான நடவடிக்கை எடுப்போம் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு உறுதி அளித்து உள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், விசாரணை முடிவின் அடிப்படையில், இண்டிகோ மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
விமான தாமதங்கள் மற்றும் ரத்துகளால் ஏற்படும் நிலைமை மேம்பட்டு வருகிறது எனத் தெரிவித்த ராம் மோகன் நாயுடு, இண்டிகோ விமான சேவை பாதிப்பு கவனிக்கப்படாமல் விடப்படாது எனவும் கூறினார்.
















