கோவா சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், விபத்தில் அன்புக்குரியவர்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது எனவும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து மாநில முதல்வர் பிரமோத் சவாந்திடம் கேட்டறிந்ததாக கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
















