கொல்கத்தாவில் சுமார் ஆறரை லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட கீதா பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.
கொல்கத்தாவின் பிரிகேட் பேரேட் மைதானத்தில் நேற்று, சனாதன சமஸ்கிருதம் சன்சத் அமைப்பின் தலைமையில், மிகப்பெரிய அளவில் கீதா பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஆறரை லட்சம் பேர் பங்கேற்று, பகவத் கீதையின் புனிதமான பாடல்களை ஒருமித்த குரலில் பாராயணம் செய்தனர்.
தவில், சங்கு போன்ற இசைக்கருவிகளின் ஒலிகள் மைதானம் முழுவதும் ஒலித்தன. இடைநீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் என்பவரால் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி போன்ற வடிவம் கொண்ட புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிலையில் சம்பவத்தின் அடுத்த நாளில், சனாதன சமஸ்கிருதம் சன்சத் அமைப்பு சார்பில் பிரம்மாண்ட கீதா பாராயண நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
















