கொல்லங்கோடு அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்ற தனியார் பேருந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த வினு என்பவரின் மகளுக்கும் கேரளாவைச் சேர்ந்த விவேக் என்பவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், பெண் வீட்டார் மணமகன் வீட்டில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகத் தனியார் பேருந்துகளில் சென்றுள்ளனர்.
கடைசியாக வந்த பேருந்து மணலி பகுதியில் உள்ள வளைவில் திரும்புபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சாலையின் குறுக்கே கவிழ்ந்த பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
















