விமான சேவையை நம்பகத்தன்மையுடன் நடத்துவதற்கும், பயணிகளுக்குத் தேவையான வசதிகளை உறுதி செய்வதற்கும் இண்டிகோ தவறிவிட்டதாக இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக இண்டிகோ நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் மற்றும் பொறுப்பு மேலாளர் இசிட்ரோ போர்குவேரஸ் ஆகியோருக்கு DGCA சம்மன் அனுப்பியது.
அதில் இருவரும் தங்கள் பணியைச் செய்யத் தவறியதாகக் குற்றம்சாட்டிய DGCA, பணி கால வரம்பு விதிகளை முறையாகச் செயல்படுத்த தவறியதே இந்தக் குழப்பங்களுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தச் சம்மனுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று எல்பர்ஸ் மற்றும் போர்குவேரஸ் ஆகியோருக்கு DGCA உத்தரவிட்டுள்ளது.
















