சேலத்தில் திமுக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்த நிலையில், கைதானவர்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் போதாமல் போலீசார் திணறினர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் தாதகாப்பட்டியிலும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்த நிலையில், அவர்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் போதாமல் போலீசார் திணறினர்.
குறைந்த அளவிலேயே ஆட்கள் வருவார்கள் எனப் போலீசார் கணித்திருந்த நிலையில், அதிகப்படியான நபர்கள் வந்தது போலீசாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனால் காவல் ஆய்வாளர் வந்த வாகனத்தில் இந்து முன்னணி அமைப்பினரை ஏற்றிப் போலீசார் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
















