மலையாள நடிகையை துன்புறுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் கேரள நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிரபல மலையாள நடிகரான தீலிப் மற்றொரு நடிகையுடன் ரகசிய உறவில் இருப்பதாக அவரது முன்னாள் மனைவியான நடிகை மஞ்சுவாரியரிடம் மற்றொரு நடிகை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுவாரியர் திலீப்பிடம் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.
இதற்கு அந்த நடிகைதான் காரணம் என்று முடிவு செய்த திலீப் கூலிப்படையை ஏவி நடிகையை காரில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த 2017-ல் இச்சம்பவம் நடந்த நிலையில் வழக்கை விசாரித்த போலீசார் நடிகர் திலீப் மற்றும் சம்பத்தில் நேரடியாக ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்தனர்.
வழக்கில் 261 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு ஆயிரத்து 700 ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. 8 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் திலீப் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பல்சர் சுனி, மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ் வி.பி., சலீம் எச், பிரதீப் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குற்றவாளிகள் 6 பேரின் தண்டனை விவரங்கள் வரும் 12ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
















