கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரியில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் 13 இடங்களிலும், கிழக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் திங்கள் சந்தை சந்திப்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது.
















