உள்ளாட்சி அமைப்புகளில் பிளீச்சிங் பவுடர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மழை பாதித்த மாவட்டங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள், விஷபூச்சிகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி அதிகரித்தால், தொற்று நோய்கள் பரவும்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளாட்சி அமைப்புகளில் மழைக்கு பின் பிளீச்சிங் பவுடர் தூவுதல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பிளீச்சிங் பவுடர் கைவசம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
















