சிவகங்கை அரசினர் காப்பகத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அரசினர் காப்பகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், ஆதரவற்ற சிறுமிகள் என 120 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகளும், மானாமதுரையை சேர்ந்த ஒரு சிறுமி என மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் மூவரும் கழிவறையில் உள்ள கண்ணாடி வழியாகத் தப்பிச் சென்றதாக விடுதி காப்பாளர் பாக்யலட்சுமி, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
















