சென்னையில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வளர்ப்பு நாயை ஏவி முதியவரை கடிக்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தமிழ்வாணன் என்ற முதியவர், பக்கத்துத் தெருவில் சென்று குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த எழில் என்ற நபர், இங்கு வந்து தண்ணீர் பிடிக்கக் கூடாது என்று கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது இருவருக்குமான வாய்த்தகராறு முற்றிய நிலையில், எழில் தனது வளர்ப்பு நாயை ஏவி தமிழ்வாணனை கடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த தமிழ்வாணன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தமிழ்வாணன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















