அமெரிக்காவின் உயர்மட்டத் தூதரான அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஆலிசன் ஹூக்கரின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதனை சரி செய்ய இருநாடுகளும் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த சிக்கல்களுக்குத் தீர்வு காண அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
இந்தியா – அமெரிக்கா இடையேயான வியூகக் கூட்டாண்மையை வலுப்படுத்துவது தொடர்பாகவும், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவது தொடர்பாகவும் ஆலிசன் ஹூக்கர் டெல்லி மற்றும் பெங்களூருவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
டெல்லியில் உள்ள உயரதிகாரிகளைச் சந்தித்து பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதுடன், பெங்களூருவில் உள்ள ISRO அலுவலகத்திற்கு சென்று பார்வையிடவுள்ளார்.
ஆலிசன் ஹூக்கரின் இந்தப் பயணம், இரு நாட்டை உறவை மேம்படுத்த முக்கிய படியாக இருக்கும் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
















