தமிழகத்தில் ஹிந்துக்கள் தங்களின் தர்மத்தை பின்பற்றுவதற்காகச் சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டியளித்தார். அதில் சனாதன தர்மம் என்பது குருட்டு நம்பிக்கை கிடையாது என்றும் அது மனிதகுலத்திற்கு ஞானத்தின் அறிவியல் பாதையை அளித்த ஒரு ஆன்மிக அறிவியல் என்றும் கூறினார்.
மற்றவர்கள் நமது தர்மத்தைத் தாக்குகிறார்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, முதலில் நாமே அதைப் பாதுகாக்கக் கற்றுக்கொண்டு, குரல் கொடுக்க வேண்டும், அப்போதுதான் யாருக்கும் நம்மைத் தாக்கும் தைரியம் வராது என்று கூறினார்.
தமிழகத்தில் ஹிந்துக்கள் தங்களின் தர்மத்தை பின்பற்றுவதற்காகச் சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய பவன் கல்யாண், இனி இது போன்ற நிலைமைகள் மீண்டும் வராமல் இருக்க ஒவ்வொரு ஹிந்துவும் விழிப்புணர்வும் எச்சரிக்கையும் உடையவராக மாற வேண்டும் என்றார்.
















