திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே இண்டிகோ விமான நிறுவனத்தின் குளறுபடிக்குக் காரணம் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய அவர், கடந்த ஒன்றாம் தேதி நடந்த கூட்டத்தில் கூட, விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றார்.
இண்டிகோ நிறுவனத்தின் விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் அட்டவணை மற்றும் உள்திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே குளறுபடிக்குக் காரணம் என்று ராம் மோகன் நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 3 நாள்களில் மட்டும் 5 லட்சத்து 86 ஆயிரத்து 705 இண்டிகோ பயணிகளுக்கு அவர்களின் பயணச்சீட்டுத் தொகையான 569 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
















