அமைதி ஒப்பந்த பரிந்துரைகளை படித்து பார்க்காமலேயே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், இருப்பினும் ஒப்பந்த பரிந்துரைகளை படித்து பார்க்காமலேயே ஜெலென்ஸ்கி எதிர்ப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறினார்.
உக்ரைனைக் காட்டிலும் ரஷ்யா அமைதி ஒப்பந்த பரிந்துரைகளுக்கு நல்ல வரவேற்பு அளிப்பதாகவும், உக்ரைன் மக்களும் தங்களது முயற்சிக்கு ஆதரவாக உள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.
















