தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரத்தில் பள்ளி மாணவன் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
பட்டீஸ்வரம் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த கவியரசன் என்ற மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 15 மாணவர்களை கைது செய்த போலீசார், கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இந்நிலையில் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி விசாரணையில் ஈடுபட்டார்.
சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார்.
















