யுனெஸ்கோவின் சர்வதேச பதிவேட்டில் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான குழுவின் தொடக்க அமர்வில் பேசிய ஜெய்சங்கர், பகவத் கீதை மற்றும் பாரத முனியின் நாட்டிய சாஸ்திரத்தை யுனெஸ்கோ உலக நினைவு சர்வதேச பதிவேட்டில் சேர்த்தது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.
இந்த அங்கீகாரங்கள் கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்துவதோடு, சமூக பெருமையை அதிகரித்து, பல்வேறு பாரம்பரியங்களுக்கும்ம் உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன என்றார்.
மேலும் இந்தியா உலக அளவில் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், யுனெஸ்கோவின் நிறுவன உறுப்பினராக இந்தியா இருப்பது கல்வி, அறிவியல் மற்றும் உலகளாவிய அமைதியை மேம்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
















