படையப்பா திரைப்படத்தில் இடம் பெற்ற நீலாம்பரி கதாப்பாத்திரம், ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதப்படவில்லை என சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்பு ரஜினிகாந்த் மனம் திறந்துள்ளார்.
படையப்பா படம் ரி ரிலீஸ் ஆவதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் படம் சூட்டிங் தொடர்பான பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், நீலாம்பரி கதாப்பாத்திரம் ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதியதாக வதந்தி பரவியது என தெரிவித்தார்.
படம் ரிலீஸ் ஆனபிறகு ஜெயலலிதா பார்க்க வேண்டும் என தெரிவித்ததாகவும், அவர் படம் பார்க்க போயஸ் கார்டனுக்கு ரீல் கொடுத்து விட்டதாக கூறினார்.
படத்தை பார்த்துவிட்டு ஜெயலலிதா பாராட்டியதாக கேள்விபட்டதாகவும்,பா நீலாம்பரி கதாப்பாத்திரம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனம் திறந்தார்.
















