அர்ஜென்டினாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாய்களை ஒரே இடத்தில் கூடச் செய்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற இந்தச் சாதனை நிகழ்வில் நாய் பிரியர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பூங்கா ஒன்றில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கோல்டன் ரெட்ரீவர் வகை நாய்களை ஒன்று திரட்டி உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
கோல்டன் ரெட்ரீவர் இனத்தின் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த உலக சாதனை நிகழ்வில் 2 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.
ஒரே இடத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாய்களின் கூடியது பார்வையாளர்கள் மற்றும் நாய் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கோல்டன் ரெட்ரீவர் சங்கம் நடத்திய உலக சாதனை நிகழ்வில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட நாய்களை ஒரே இடத்தில் திரட்டிச் சாதனை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















