போரை நிறுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்பவில்லையோ என்று நினைக்கத் தோன்றுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாகவும், ரஷ்யாவுக்கு இதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
உக்ரைன் அதிபர் தான் பேச்சைத் தாமதப்படுத்தி வருகிறார் எனவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
















