வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனோசியாவில் மீட்பு பணிகளை மேற்கொள்ள யானைகள் களமிறக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வடக்கு மற்றும் மேற்கு சுமத்ரா பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 960-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமத்ரா தீவில் உள்ள அச்சே மாநிலத்தில் சீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.
ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உணவு, குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர். வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தசை வலி ஆகியவற்றால் மக்கள் வாடுவதாக இந்தோனேசியச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுமத்ராவில் உள்ள பிடி ஜெயா பகுதியில் மீட்பு பணியாளர்கள் எளிதில் செல்ல முடியாத கடினமான நிலப்பரப்புகளில் யானைகளை கொண்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யானைகள் தங்கள் பலத்தையும் வலிமையையும் பயன்படுத்திப் பெரிய இடிபாடுகளை நகர்த்தி அகற்ற உதவுகின்றன.
















