நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பில் முந்தைய காங்கிரஸ் அரசில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து அமைச்சராக இருந்தார்.
சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின், அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்தார்.
இந்நிலையில் சமீபத்தில், சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், பஞ்சாப்பில் 500 கோடி ரூபாய் கொடுப்பவர்களே முதல்வர் நாற்காலியில் அமர்வதாகக் கூறி சர்ச்சையை கிளப்பினார்.
இதனை தொடர்ந்து நவ்ஜோத் கவுரை காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்து பஞ்சாப் காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.
















