தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மகன் கொல்லப்பட்டதால் சோகத்தில் இருந்த தாய் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பச்சேரி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சங்கரலிங்கம், கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.
இதனால் சோகத்தில் இருந்த அவரது தாய் அழகுநாச்சி, விஷம் அருந்தியுள்ளார். இதனை அறிந்த அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள், அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
















