சென்னையில் இன்று முதல் 14ம் தேதி வரை உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெறவுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் இந்தப் போட்டிக்கான கோப்பையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார்.
போட்டி தொடரில் இந்தியா, தென்னாபிரிக்கா ஜப்பான் ,மலேசியா , தென்கொரியா உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்தியா சார்பில், ஜோஷ்னா சின்னப்பா, வீர் சோத்ரானி, வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங் உள்ளிட்டோர் களம் காண்கிறார்கள். இந்தியா அணி இன்று தனது முதல் போட்டியில் ஸ்விட்சர்லாந்தை எதிர்கொள்கிறது.
ராயப்பேட்டைவில் உள்ள எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் மாலை 6 மணிக்குத் தொடங்கும் போட்டியை, பார்வையாளர்கள் இலவசமாகக் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















