நம் நாட்டில் மீண்டும் தாக்குதல் நடத்துவது தொடர்பாகப் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் முக்கிய கூட்டம் நடத்திவுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.
இதில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், நம் நாட்டில் அடுத்தடுத்து பல்வேறு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறை எச்சரித்திருந்தது.
இதனிடையே, டெல்லி செங்கோட்டை அருகே நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு தாக்குதலில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்புடையது என விசாரணையில் உறுதியானது.
இந்நிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் பயங்கரவாதிகள் மீண்டும் பெரிய கூட்டத்தை நடத்தி ஆலோசித்ததாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஜெய்ஷ் – இ – முகமது, லஷ்கர் – இ – தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் கூட்டாக ஆலோசனை நடத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.
மேலும், ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையில் தகர்க்கப்பட்ட முகாம்களில் மீண்டும் கட்டுமான பணிகள் நடப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
















