இண்டிகோ விமானங்களின் எண்ணிக்கை 5 சதவிகிதம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
விமானிகள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் நாட்டின் மிகப்பெரிய இண்டிகோ விமான நிறுவன சேவை கடுமையாகப் பாதித்தது.
இதனால் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாகப் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில், இண்டிகோவின் 110 விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என மத்திய அரசுத் தகவல் தெரிவித்துள்ளது.
















